தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்க் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்ப் பகுதிகளில் உள்ள தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது பாலாற்றில் கலந்து நிலத்தடி நீர் மாசு படுவதாகவும் எனவே தொடர்ச்சியாக நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்க் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முன்னதாக பேரணியாக நடந்து வந்த அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக்க் கண்டன கோஷங்களை எழுப்பினர் இதனைத்த் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் மனுவைப்ப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்