பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் . இவருக்கும் , அதே பகுதியில் வசித்து வரும் உறவினருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் , இளம்பெண் வாலாஜாவில் உள்ள கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார். இதற்காக கடந்த 2 மாதமாக தந்தை வீட்டில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார் . வழக்கம்போல் நேற்றுமுன்தினம் காலை வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றவர் , மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து , இளம்பெண்ணின் தந்தை பாணாவரம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி கடத்தப்பட்டரா ? என விசாரணை நடத்தி வருகின்றனர் .