ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை காவலர் தேர்வு மையங்களில் எஸ்பி ஆய்வு


இதில் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 8488 பேர் இரண்டாம் நிலை காவலர்கள் எழுத்துத் தேர்வு எழுதுகிறார்கள் இந்த தேர்வின்போது 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் ராணிப்பேட்டை எல்எப்சி மேல்நிலைப்பள்ளி , பெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.


இந்த தேர்வு மையங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.