குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுத்தால் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்படும் என சமூக ஆர்வலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பையாக பிரித்து கொடுத்தால் தங்க காசு - சமூக ஆர்வலர் அறிவிப்பு


வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு பகுதியில் பொது மக்களின் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு பகுதியில் பொதுமக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தினசரி மாநகராட்சி துணை அமைப்பாளர்கள் இடம் வழங்க வேண்டுமென்றும். அவ்வாறு வழங்குபவர்கள் மாநகராட்சி துணை பணியாளர்கள் மூலமாக தொடர்ச்சியாக கண்காணிக்க படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு தொடர்ச்சியாக மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்கும் நபர்களின் பெயர்கள் ஒரு சீட்டில் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட உள்ளதாக சமூக ஆர்வலர் வினேஷ் சரவணன் அப்பகுதி மக்களிடையே தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைவருக்கும் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.