ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தனிகைபோளூர் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 51). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாபு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்று மதியம் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் செயின், பட்டு புடவைகள் மற்றும் சுமார் ரூ.1 லட்சம் போனது தெரியவந்தது.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் பாபு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து திருட்டு நடத்தியது தெரியவந்தது.

போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.