👉 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஜாக்கி சான் ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக்கில் (Victoria Peak) பிறந்தார்.
👉 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக்கலைஞர், பாரத ரத்னா பண்டிட் ரவிசங்கர் (Pandit Ravi Shankar) வாரணாசியில் பிறந்தார்.
👉 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஐ.பி.எம்., தனது System/360 ஐ அறிவித்தது.
முக்கிய தினம் :-
உலக சுகாதார தினம்
🌳 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.
🌳 உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
பிறந்த நாள் :-
வில்லியம் வேட்ஸ்வொர்த்
✍ உலகப் புகழ்பெற்ற கவிஞரும், கவிதையின் முன்னோடியுமான வில்லியம் வேட்ஸ்வொர்த் (William Wordsworth) 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள காக்கர்மவுத் என்ற இடத்தில் பிறந்தார்.
✍ இவர் 1787ஆம் ஆண்டு பதினான்கு வரிப்பாடல் ஒன்றை முதன்முறையாக எழுதினார். 1793ஆம் ஆண்டு தனது கவிதைகளைத் தொகுத்து, 'ஈவ்னிங் வாக் அன்ட் டிஸ்கிரிப்டிவ் ஸ்கெட்ச்சஸ்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
✍ மேலும் இவரது 'தி பிரிலூட்' தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் குறித்த இவரது 'சாலிட்டரி ரீப்பர்' என்ற கவிதை உலகப் புகழ் வாய்ந்தது.
✍ கவிதைகளுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவரும், காலத்தை வென்ற கவிதைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கவிஞராக முத்திரைப் பதித்தவருமான வில்லியம் வேட்ஸ்வொர்த் தனது 80வது வயதில் (1850) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
451 – அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான்.529 – சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார்.
1141 – மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள்.
1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.
1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.
1767 – பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு வந்தது.
1789 – மூன்றாம் செலீம் உதுமானியப் பேரரசின் சுல்தானாகவும், இசுலாமின் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
1827 – ஆங்கிலேய மருந்தியலாளர் ஜோன் வோக்கர் தான் முந்தைய ஆண்டு கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
1829 – பின்னாள் புனிதர் இயக்கத்தின் நிறுவனர் இரண்டாம் யோசப்பு இசுமித்து மோர்மொன் நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.
1831 – பிரேசிலின் முதலாம் பெட்ரோ பேரரசர் தமது பதவியைத் துறந்து, தனது சொந்த நாடான போர்த்துகல் நான்காம் பேதுரோ என்ற பெயரில் மன்னரானார்.
1868 – கனடாக் கூட்டமைப்பின் தந்தைகளுள் ஒருவர் தோமசு டார்சி மெக்கீ படுகொலை செய்யப்பட்டார்.
1906 – விசுவியசு எரிமலை வெடித்தில் நாபொலியில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1906 – எசுப்பானியா மற்றும் பிரான்சு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
1927 – முதலாவது தொலைத்தூர தொலைக்காட்சி சேவை வாசிங்டன் நகரம், நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.
1928 – வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை சப்பான் கைப்பற்றியது.
1943 – உக்ரைனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாட்சிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான சப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
1946 – பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
1948 – உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.
1948 – சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் உயிரிழந்தனர்.
1955 – வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
1964 – ஐபிஎம் தனது சிஸ்டம்/360 ஐ அறிவித்தது.
1978 – யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல்துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
1978 – நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை அமெரிக்கத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் கை விட்டார்.
1983 – ஸ்டோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் விண்ணோடம்|விண்ணோடத்தில்]] இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
1989 – கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.
1990 – எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர்.
1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டாவின் கிகாலியில் துட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
1995 – உருசியத் துணை இராணுவப் படைகள் செச்சினியாவின் சமாசுக்கி நகரில் பொதுமக்களைத் தாக்கிக் கொன்றன.
2003 – அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின. அடுத்த இரு நாட்களில் சதாம் உசைனின் ஆட்சி வீழ்ந்தது.
2007 – தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
2009 – பெருவின் முன்னாள் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பொதுமக்கள் படுகொலைகள், கடத்தல்களுக்கு உத்தரவிட்டமைக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
2015 – தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு ஆந்திரப்பிரதேச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இன்றைய தின பிறப்புகள்
1506 – பிரான்சிஸ் சவேரியார், இயேசு சபையைத் தோற்றுவித்த எசுப்பானியப் புனிதர் (இ. 1552)1770 – வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1850)
1889 – கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (இ. 1957)
1890 – விக்டோரியா ஒகாம்போ, அர்ச்செந்தீன இலக்கியவாதி, எழுத்தாளர் (இ. 1979)
1894 – லூயிஸ் ஹாம்மெட், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1987)
1903 – மு. பாலசுந்தரம், இலங்கை அரசியல்வாதி (இ. 1965)
1920 – ரவி சங்கர், இந்திய-அமெரிக்க சித்தார் கலைஞர் (இ. 2012)
1926 – பிரேம் நசீர், இந்திய நடிகர் (இ. 1989)
1935 – எஸ். பி. முத்துராமன் தமிழ்த்திரைப்பட இயக்குனர்
1944 – மகொடோ கோபயாஷி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
1944 – கெர்ஃகாத் சுரோடர், செருமனியின் 7வது அரசுத்தலைவர்
1947 – மக்தூம் சகாபுதீன், பாக்கித்தானிய அரசியல்வாதி.
1954 – ஜாக்கி சான், ஆங்காங் நடிகர்
1962 – ராம் கோபால் வர்மா, இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்
1962 – கோவை சரளா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1964 – ரசல் குரோவ், நியூசிலாந்து-ஆத்திரேலிய நடிகர்
இன்றைய தின இறப்புகள்
AD 30 – நாசரேத்தின் இயேசு கிறித்து, (சிலுவையில் அறைந்த நாள்)[1][2][3] (b. circa 4 BC)1614 – எல் கிரேக்கோ, கிரேக்க-எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1541)
1804 – டூசான் லூவர்சூர், எயிட்டி இராணுவத் தலைவர் (பி. 1743)
1891 – பி. டி. பர்னம், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1810)
1947 – ஹென்றி ஃபோர்ட், அமெர்க்கத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1863)
1971 – கே. சுப்பிரமணியம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் (பி. 1904)
1979 – ஏ. வி. பி. ஆசைத்தம்பி, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (பி. 1929)
1998 – எஸ். வி. வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1911)
2001 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய இயற்பியலாளர் (பி. 1922)
2004 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய செவ்வியல் நடனக் கலைஞர் (பி. 1926)
2009 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார அறிஞர் (பி. 1922)
2014 – வி. கே. மூர்த்தி, தென்னிந்திய ஒளிப்பதிவாளர் (பி. 1923)
2015 – கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)
இன்றைய தின சிறப்பு நாள்
ருவாண்டா இனப்படுகொலை நினைவு நாள்பெண்கள் நாள் (மொசாம்பிக்)
உலக சுகாதார நாள்