குறள் : 1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.


மு.வ உரை :

நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

கலைஞர் உரை :

அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது

சாலமன் பாப்பையா உரை :

என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

Kural 1082

Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu

Thaanaikkon Tanna Thutaiththu

Explanation :

This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.

Horoscope Today: Astrological prediction for April 15, 2023

இன்றைய ராசிப்பலன் - 15.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


15-04-2023, சித்திரை 02, சனிக்கிழமை, தசமி திதி இரவு 08.45 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவோணம் நட்சத்திரம் காலை 07.35 வரை பின்பு அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.51 வரை பின்பு சதயம். சித்தயோகம் பின்இரவு 05.51 வரை பின்பு அமிர்தயோகம்.  

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 15.04.2023 | Today rasi palan - 15.04.2023

மேஷம்

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அன்புடன் பழகுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். தொழிலில் பணியாட்கள் தங்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். 

சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபம் பெறலாம்.

துலாம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் நிலவும். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். இதுவரை வராத வெளிக்கடன்கள் இன்று வசூலாகி மகிழ்ச்சி அளிக்கும். 

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெற்றோரின் ஆதரவு கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும்.

மீனம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வகையில் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.







கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001