ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பொன்னப்பந்தாங்கல் காலனி பஜனை கோவில் தெருைவ சேர்ந்தவர் சரவணன் (வயது 52), சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக பெங்களூருவில் மனைவி செல்வி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார். அவ்வப்போது பொன்னப்பந்தாங்கல் பகுதிக்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் சரவணன் கடந்த 24-ந் தேதி பொன்னப்பந்தாங்கல் பகுதிக்கு வந்தார். இவருக்கு சொந்தமான நிலம் பன்னியூரில் உள்ளது. நேற்று சரவணன் நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் தென்னை மட்டைகளை சீர் செய்ய மரத்தில் ஏறினார். அப்போது கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் வாலாஜா அரசு தலைமை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்..
இச்சம்பவம் குறித்து பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.