குறள் : 1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
மு.வ உரை :
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
கலைஞர் உரை :
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது
சாலமன் பாப்பையா உரை :
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
Kural 1064
Itamellaam Kollaath Thakaiththe Itamillaak
Kaalum Iravollaach Chaalpu
Explanation :
Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.
Horoscope Today: Astrological prediction for March 28, 2023
இன்றைய ராசிப்பலன் - 28.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
28-03-2023, பங்குனி 14, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 07.03 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.32 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் மாலை 05.32 வரை பின்பு மரணயோகம்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 28.03.2023 | Today rasi palan - 28.03.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நன்மை தரும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சியில் உற்றார் உறவினர்களால் நற்பலன்கள் கிட்டும்.
கன்னி
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
தனுசு
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.