குறள் : 1029

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்ற மறைப்பான் உடம்பு.


மு.வ உரை :

தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

கலைஞர் உரை :

தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்

சாலமன் பாப்பையா உரை :

தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?


Kural 1029

Itumpaikke Kolkalam Kollo Kutumpaththaik

Kutra Maraippaan Utampu

Explanation :

Is it only to sufering that his body is exposed who undertakes to preserve his family from evil ?


Horoscope Today: Astrological prediction for February 20, 2023


இன்றைய ராசிப்பலன் - 20.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

20-02-2023, மாசி 08, திங்கட்கிழமை, அமாவாசை திதி பகல் 12.36 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். சர்வ அமாவாசை. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 20.02.2023 | Today rasi palan - 20.02.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வெற்றி தரும்.

ரிஷபம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளால் மனசங்கடங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

துலாம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம்.

விருச்சிகம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பெற்றோருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

தனுசு

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதகரிக்கும்.

மகரம்

இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் கிட்டும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

இன்று பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும். வீண் ஆடம்பரத்தை குறைத்து சிக்கனமாக இருப்பது நல்லது.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001