குறள் : 1022

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.


மு.வ உரை :

முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

கலைஞர் உரை :

ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்

சாலமன் பாப்பையா உரை :

முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.


Kural 1022

Aalvinaiyum Aandra Arivum Enairantin

Neelvinaiyaal Neelum Kuti

Explanation :

Ones family is raised by unti ring perseverance in both efort and wise contrivances.


Horoscope Today: Astrological prediction for February 13, 2023


இன்றைய ராசிப்பலன் - 13.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


13-02-2023, மாசி 01, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 09.46 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 02.35 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பின்இரவு 02.35 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 13.02.2023 | Today rasi palan - 13.02.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும். வியாபாரம் ரீதியாக சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலனை அடைய முடியும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் அனுகூலம் ஏற்படும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மகரம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001