குறள் : 991

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.


மு.வ உரை :

பண்பு உடையவராக வாழும் நல்வழியை யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

கலைஞர் உரை :

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்

சாலமன் பாப்பையா உரை :

எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.


Kural 991

Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum

Panputaimai Ennum Vazhakku

Explanation :

If one is easy of access to all it will be easy for one to obtain the virtue called goodness.


Horoscope Today: Astrological prediction for January 12 2022



இன்றைய ராசிப்பலன் - 12.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

12-01-2023, மார்கழி 28, வியாழக்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.37 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரம் நட்சத்திரம் பகல் 02.24 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 02.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 12.01.2023 | Today rasi palan - 12.01.2023

மேஷம்

இன்று தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும். 

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

மிதுனம்

இன்று வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். 

தனுசு

இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் ரீதியாக வெளி வட்டார நட்பு கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலனே ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் போது கவனமுடன் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001