Woman commits suicide by drinking acid due to debt problem when her daughter got engaged






கலவை அருகே கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (70), கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் 2வதாக ராணி(54) என்ப வரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன் உள்ளனர்.

மகனுக்கு கடந்த 6மாதத்துக்கு முன்பு கடன் வாங்கி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி இளைய மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று முன்தினம் ராணியிடம் ஏற்கனவே மகன் திருமணத்திற்கு கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும், கடன் வாங்கி மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்ற விரக்தி அடைந்த ராணி, நேற்றுமுன்தினம் வீட்டு கழிவறையில் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள்' அவரை மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.