வேலூர்: வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்று இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. 

இந்நிலையில் மாண்டஸ் புயல் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளது. 

தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.