திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 41 நாட்களில் 79 ஆயிரம் பக்தர்கள் மூலம் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, முருகனை வணங்கி செல்கின்றனர். 


அவ்வாறு வரும் பக்தர்கள், பணம், தங்கம், வெள்ளி என செலுத்திய காணிக்கைகளால் நிரம்பிய உண்டியல்கள் எண்ணும் பணி திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைற்றது. 

இந்துசமய அரணாலயத்துறை கோவில் துணை ஆணையர் விஜயா, வேலூர் உதவி ஆணையர் நித்யா ஆகியோர் முன்னிலையில் நடந்த இப்பணியில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியின் முடிவில் 41 நாட்௧ளில்  1 கோடியே 45 லட்சத்து 79,042 ரூபாய் ரொக்கம், 708 கிராம் தங்கம், 19,750 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலு த்தியிருந்தனர் . 

இதனை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது .