வேலூர் மத்­திய சிறையில் இன்று காலை காவல்து­றை­யி­னர் திடீர் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர். வேலூரில் மத்­திய சிறை உள்­ளது. இங்குள்ள கைதி­கள் சிறை­ய­றையில் காவல்­ துறை சார்­பில் அவ்­வப் போது திடீர் சோதனை நடத்­தப்­படு­வது வழக்­கம்.

அதன்­படி இன்று காலை டி.எஸ்.பி. திருநாவுக்­க­ரசு தலை­மை­யில் 3 இன்ஸ்­பெக்டர்­க­ளுடன் கூடிய 72 போலீ­சார் வேலூர் மத்­திய சிறை­யில் திடீர் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 8 மணி வரை தொடர்ந்து நடை­பெற்­றது. சோத­னை­யின் போது கைதி­கள் இருந்த சிறை­ய­றையில் கஞ்சா, செல்­போன் போன்றவை பதுக்கி வைக்­கப்­பட்டிருக்­கி­றதா என்று போலீ­சார் தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்­ட­னர்.

ஆனால் எதுவும் கிடைக்கா­த­தை­ய­டுத்து போலீ­சார் திரும்பிச் சென்­ற­னர். இத னால் சிறை வளாகத்­தில் பரப­ரப்பு ஏற்­பட்­டது.