காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் மரம் வெட்டும்பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தவறி கீழே விழுந்துள்ளார்.இதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தவரை, அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் விசாரணை நடத்தி வருகின்றனர். பதிவு செய்து