ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சின்னமலையில் எழுந்தருளி உள்ள யோக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பிரம்மதீர்த்தம் என்னும் தக்கான்குளக்க ரையில் எழுந்தருளி உள்ள 32 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து துளசி மாலை, மலர் மாலை, வட மாலை மற்றும் பல்வேறு வகையான நறுமணப் பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரா தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கலவை அப்பதுரை பேட்டையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. காலையில் சாமி அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதியில் பஜனையுடன் வீதி உலா நடைபெற்றது. மாலையில் அனுமனுக்கு வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
காவேரிப்பாக்கம் அடுத்த உப்பரந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள 27 அடி உயர பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சார்பில் 1008 வடைமாலை, துளசி மாலை, மற்றும் பூ மாலை செலுத்தி வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள் துளசி மாலை அணிந்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.