👉 1911ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தமிழ் இலக்கியத்தின் முன்னோடி ஏ.கே.செட்டியார், திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்தார்.
👉 1838ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பாம்பே டைம்ஸ் என்ற நாளிதழ் முதன்முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் 1861ஆம் ஆண்டு தி டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
👉 1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி உலகில் முதன்முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.
👉 1973ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நாசா, மரைனர் 10 என்ற விண்கலத்தை புதன் கோளை நோக்கி அனுப்பியது. 1974ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
பிறந்த நாள் :-
அமர்த்திய சென்
🌟 நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் 1933ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் பிறந்தார்.
🌟 பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம், பாலின ஆய்வுகள் உட்பட பல துறைகளில் இவரது ஆய்வுகள் விரிவடைந்துள்ளன. சமூகத் தேர்வு (Social Choice) என்ற கருத்தியலை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் இணைத்த முதல் பொருளாதார நிபுணர் இவரே.
🌟 உணவு உற்பத்தி மட்டும் போதாது. அதை வாங்கும் சக்தி மக்களுக்கு வேண்டும். பஞ்சம், வறட்சி ஏற்பட்டால் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றார் சென்.
🌟 பொருளாதாரத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி, 1998ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதாரம் தவிர, மனிதநேயம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பல களங்களில் இவருடைய சேவைகளைப் பாராட்டி, பல நாடுகள் இவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. 1999ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அன்னபூர்ணா மஹாராணா
🌷 விடுதலைப் போராட்ட வீராங்கனை மற்றும் பெண்கள் உரிமைக்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதியான அன்னபூர்ணா மஹாராணா 1917ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தார்.
🌷 அபார நினைவாற்றல் கொண்ட இவர் 12 வயதிலேயே பகவத் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 14 வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.
🌷 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு முதன்முதலாக சிறை சென்றார். 1934ஆம் ஆண்டு காந்திஜி நடத்திய நீண்ட பாதயாத்திரையில் கலந்துகொண்டார். வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். இவர் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்திலும் பங்கேற்று உள்ளார்.
🌷 இவரது இலக்கிய சேவைகளுக்காக சரள புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. உத்கல் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இவர் உத்கல் ரத்னா எனப் போற்றப்பட்டார்.
🌷 அர்ப்பணிப்பு உணர்வுடனும், தேசபக்தியுடனும் சேவையாற்றிய அன்னபூர்ணா மஹாராணா தனது 95-வது வயதில் (2012) மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
361 – உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார்.
644 – இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார்.
1333 – ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1492 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1493 – கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார்.
1534 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
1783 – அமெரிக்க விடுதலைப் படை கலைக்கப்பட்டது.
1789 – அமெரிக்காவின் முதலாவது மாவட்ட நீதிமன்றம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.
1793 – பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கூசு தலைதுண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1812 – நெப்போலியனின் இராணுவத்தினர் வியாசுமா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
1848 – நெதர்லாந்தில் இட்ச்சு அரசகுடும்பத்தினரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1903 – ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1905 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டார்.
1918 – செருமனி கடற்படையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட 40,000 மாலுமிகள் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.
1930 – பிரேசிலில் அக்டோபர் 24 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கெட்டூலியோ வார்கசு இடைக்கால அரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1936 – பிராங்க்ளின் ரூசவெல்ட் அமெரிக்காவின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வில்லெம்சாவென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
1956 – சூயெசு நெருக்கடி: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் எகிப்தியக் கட்டுப்பாட்டில் இருந்த காசாவில் தாக்குதல் நடத்தியதில் 275 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
1956 – அங்கேரியப் புரட்சி: தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள் அல்லாத கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய புதிய அங்கேரிய அரசு நிறுவப்பட்டது. இதே வேளையில் மாஸ்கோவில் யானோசு காதார் தலைமையில் சோவியத்-ஆதரவு அங்கேரிய அரசு அமைக்கப்பட்டது.
1957 – இசுப்புட்னிக் திட்டம்: உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் இசுப்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.
1963 – தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது.
1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1964 – வாசிங்டன், டி. சி. மக்கள் முதன் முறையாக அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
1973 – மரைனர் திட்டம்: நாசா மரைனர் 10 என்ற விண்கலத்தை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் புதனை அடைந்து அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் என்ற சாதனையைப் பெற்றது.
1975 – சேக் முசிபுர் ரகுமானின் ஆதரவாளர்கள் உட்படப் பல வங்காளதேச அரசியல்வாதிகள் டாக்கா மத்திய சிறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
1978 – டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – அமெரிக்காவில், வட கரொலைனாவில் கம்யூனிசத் தொழிலாளர் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் கிளான் மற்றும் நியோநாட்சி குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1982 – ஆப்கானித்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1986 – மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1988 – இலங்கையின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகப் போராளிகளினால் மாலை தீவுகள் அரசைக் கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
1997 – மனித உரிமை மீறல்களுக்காகவும், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் சூடான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
2014 – 1 உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டது.
இன்றைய பிறப்புகள்
1618 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (இ. 1707).
1863 – ஆல்பிரட் பெரோ, பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1925)
1878 – பெங்களூர் நாகரத்தினம்மா, கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (இ. 1952)
1882 – யாக்குப் கோலாசு, பெலருசிய எழுத்தாளர் (இ. 1956)
1901 – ஆன்றே மால்றோ, பிரான்சிய வரலாற்றாளர் (இ. 1976)
1907 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2004)
1911 – ஏ. கே. செட்டியார், தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. 1983)
1913 – நிகில் சக்கரவர்த்தி, இந்திய இதழிகையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் (இ. 1998)
1928 – ஒசாமு தெசூகா, சப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1989)
1930 – பெடரிக்கு இசுட்டால், இடச்சு மெய்யியலாளர் (இ. 2012)
1932 – அன்னை பூபதி, இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1988)
1933 – அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியலாளர்
1935 – ஜிக்கி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி (இ. 2004)
1949 – அன்னா வின்டொர், ஆங்கிலேய-அமெரிக்க ஊடகவியலாளர்
இன்றைய இறப்புகள்
644 – உமறு இப்னு அல்-கத்தாப், சவுதி அரேபிய கலீபா (பி. 584)
1584 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கர்தினால், புனிதர் (பி. 1538)
1639 – மார்டின் தெ போரஸ், பெருவின் புனிதர் (பி. 1579)
1944 – ஜாக் மைனர், அமெரிக்கப் பறவையியலாளர், சூழலியலாளர் (பி. 1865)
1954 – ஆன்றி மட்டீசு, பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. 1869)
1956 – யோன் மெட்சிங்கர், பிரான்சிய ஓவியர் (பி. 1883)
1989 – டிமோதி இம்பவன்றா, பிஜியின் 2வது பிரதமர் (பி. 1934)
1993 – மோகன் ராம், இந்தியப் பத்திரிகையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1933)
1998 – பாப் கார்னே, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1915)
2002 – உல்ரிகா பாபியாகோவா, சுலோவாக்கிய வானியலாளர் (பி. 1976)
2006 – ஈ. வி. சரோஜா, தமிழ்த் திரைப்பட நடிகை, (பி. 1935)
2016 – டபிள்யூ. டி. அமரதேவா, சிங்களப் பாடகர், இசையமைப்பாளர் (பி. 1927)
2013 – ரேஸ்மா, பாக்கித்தானிய நாட்டுப்புற இசைக் கலைஞர் (பி. 1947)
இன்றைய சிறப்பு நாள்
கலாச்சார நாள் (சப்பான்)
விடுதலை நாள் (பனாமா, கொலம்பியாவிடம் இருந்து 1903)
விடுதலை நாள் (டொமினிக்கா, பிரித்தானியாவிடம் இருந்து 1978)
விடுதலை நாள் (மைக்குரோனீசியா, அமெரிக்காவிடம் இருந்து 1986)
வெற்றி நாள் (மாலைத்தீவுகள்)
அன்னையர் நாள் (கிழக்குத் திமோர்)