ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து பெண்களுக்காக நடத்தும் தனியார் துறைசிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. 

இதில் கல்வித் தகுதி 2020-21 மற்றும் 22-ம் கல்வி யாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று 18 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வேலை நாடு நர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி காலம், மாதச் சம்பளம் ரூ.16,557, உணவு, தங்கும் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதியுடையவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய வற்றின் அசல் மற்றும் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.