குறள் : 940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
மு.வ உரை :
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல் உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
கலைஞர் உரை :
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்
சாலமன் பாப்பையா உரை :
துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.
Kural 940
Izhaththoruum Kaadhalikkum Soodhepol Thunpam
Uzhaththoruum Kaadhatru Uyir
Explanation :
As the gambler loves (his vice) the more he loses by it so does the soul love (the body) the more it suffers through it.
Horoscope Today: Astrological prediction for November 21 2022
இன்றைய ராசிப்பலன் - 21.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
21-11-2022, கார்த்திகை 05, திங்கட்கிழமை, துவாதசி திதி பகல் 10.07 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. சித்திரை நட்சத்திரம் இரவு 12.14 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 12.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 21.11.2022 | Today rasi palan - 21.11.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.
கடகம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதம் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் கிட்டும். குடும்ப பிரச்சினைகள் சற்று குறையும்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். நெருங்கியர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.
துலாம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது. வேலைபளு அதிகரிக்கும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.
மகரம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதி இருக்கும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் தொடங்குவது நல்லது.
மீனம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 12.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.