குறள் : 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.


மு.வ உரை :

வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.


கலைஞர் உரை :

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்


சாலமன் பாப்பையா உரை :

வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.


Kural 931

Ventarka Vendritinum Soodhinai Vendradhooum

Thoontirpon Meenvizhungi Atru


Explanation :

Though able to win let not one desire gambling (for) even what is won is like a fish swallowing the iron in fishhook.

Horoscope Today: Astrological prediction for November 12 2022



இன்றைய ராசிப்பலன் - 12.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


12-11-2022, ஐப்பசி 26, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 10.26 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 07.32 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


இன்றைய ராசிப்பலன் - 12.11.2022 | Today rasi palan - 12.11.2022

மேஷம்

இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவர். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வருமானம் இரட்டிப்பாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும். 

கும்பம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001