வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு. இருந்துள்ளது.
அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையம் எதிரே வரும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த சாலை விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்கம் சேதம் ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு ஏதும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இதனையடுத்து பயணிகள் மாற்று பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டன.
இதுதொடர்பாக காவேரிப் பாக்கம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.