அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்த காமேஷ் கிரண் (வயது 21). இவர் நேற்று காலை அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதிக்கு கார் ஓட்டி சென்றார்.
அரக்கோணம் - காஞ்சீபுரம் ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பனப்பாக்கத்தை அடுத்த உளியநல்லூரில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த சந்துரு (24) என்பவர் அரக்கோணம் நோக்கி காரில் வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேம்பாலத்தில் 2 கார்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் காமேஷ் கிரண் ஓட்டி வந்த கார் தலை கீழாக கவிழ்ந்து நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக காமேஷ் கிரண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் கார்களின் முன் பகுதிகள் உடைந்து சேதம் ஏற்ப்பட்டது.
இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.