குறள் : 946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
மு.வ உரை :
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
கலைஞர் உரை :
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை
சாலமன் பாப்பையா உரை :
குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.
Kural 946
Izhivarindhu Unpaankan Inpampol Nirkum
Kazhiper Iraiyaankan Noi
Explanation :
As pleasure dwells with him who eats moderately so disease (dwells) with the glutton who eats voraciously.
Horoscope Today: Astrological prediction for November 27 2022
இன்றைய ராசிப்பலன் - 27.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
27-11-2022, கார்த்திகை 11, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.25 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பகல் 12.38 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 12.38 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 27.11.2022 | Today rasi palan - 27.11.2022
மேஷம்
இன்று நீங்கள் எடுத்த காரியம் பாதியில் நிற்பதற்கான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியான கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வயதில் பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, எதிலும் நிதானமாக இருப்பது உத்தமம்.
மிதுனம்
இன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பெண்களுக்கு வேலைபளு கூடும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மன உளைச்சல் அதிகரிக்கும். எதிலும் கவனமாகவும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது. பணவரவில் இருந்த தடைகள் நீங்கி தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
விருச்சிகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அளிக்கும்.
மகரம்
இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
மீனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001