குறள் : 932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
மு.வ உரை :
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும் நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
கலைஞர் உரை :
ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?
சாலமன் பாப்பையா உரை :
ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?
Kural 932
Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol
Nandreydhi Vaazhvadhor Aaru
Explanation :
Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?
Horoscope Today: Astrological prediction for November 13 2022
இன்றைய ராசிப்பலன் - 13.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-11-2022, ஐப்பசி 27, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.52 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 10.18 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 13.11.2022 | Today rasi palan - 13.11.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.
கன்னி
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
துலாம்
இன்று எடுக்கும் காரியத்தை செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடை தாமதங்கள் ஏற்படும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சினைகள் குறையும்.
மகரம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். உறவினர்கள் வழியில் சுப செய்தி வரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.
கும்பம்
இன்று தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.