👉 1970ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கர்நாடகாவிலுள்ள பெங்களூரில் பிறந்தார்.
முக்கிய தினம் :-
உலக வறுமை ஒழிப்பு தினம்
🌹 இத்தினம் 1987ஆம் ஆண்டு முதன்முதலாக பிரான்சில் பாரிஸ் நகரில் கடைபிடிக்கப்பட்டது. உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐ.நா.சபை 1992ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
🌹 இதன் நோக்கம் வறுமையை போக்க அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும் என்பதாகும்.
நினைவு நாள் :-
கவியரசு கண்ணதாசன்
✍ பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா.
✍ காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள் ஆகும்.
✍ இவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். பராசக்தி, ரத்தத்திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
✍ இயேசு காவியம், பாண்டிமாதேவி உள்ளிட்ட காப்பியங்களையும், அம்பிகை அழகு தரிசனம், தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்களையும், அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.
✍ ஆழமான வாழ்க்கை ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் 54வது வயதில் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மறைந்தார்.
பிறந்த நாள் :-
ரிச்சர்ட் ஜான்சன்
🌷 அமெரிக்காவின் ஒன்பதாவது துணை ஜனாதிபதியான ரிச்சர்ட் ஜான்சன் 1780 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயுவில் பிறந்தார்.
🌷 இவர் பன்னிரண்டாவது சட்டத் திருத்தத்தின் கீழ் அமெரிக்க செனட் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே துணைத் தலைவர் ஆவார்.
🌷 இவர் 1806 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🌷 இவர் தனது 70வது வயதில் 1850 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி காலமானார்.
இன்றைய நிகழ்வுகள்
1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது.
1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.
1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது.
1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார்.
1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார்.
1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னன் டன்கிர்க் நகரை 40,000 பவுண்களுக்கு பிரான்சுக்கு விற்றார்.
1800 – இடச்சு குடியேற்ற நாடான குராசோ பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.
1806 – எயித்தியப் புரட்சியின் முன்னாள் தலைவர் பேரரசர் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.
1861 – ஆத்திரேலியா குயின்சுலாந்தில் பழங்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்காரியா, கிரேக்கம், செர்பியா ஆகியன மொண்டெனேகுரோவுடன் இணைந்து உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தன.
1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாட்சி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் கிரேக்கத்தின் செரெசு என்ற கிராமத்தில் அனைத்து ஆண்களையும் படுகொலை செய்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.
1943 – சயாம் மரண இரயில்பாதை (பர்மா-தாய்லாந்து தொடருந்து சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
1956 – முதலாவது வணிகநோக்கு அணுக்கரு உலையை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி இங்கிலாந்து, செலாஃபீல்டு என்ற இடத்தில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1965 – நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
1966 – நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.
1970 – மொண்ட்ரியால்: கியூபெக் மாநிலத்தின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான பியேர் லாப்போர்ட்டே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1973 – எகிப்துக்கு எதிராக இசுரேல் நடத்திய போரில் இசுரேலுக்கு உதவிய மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஓப்பெக் அமைத்து எண்ணெய்த் தடையை அறிவித்தது.
1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
1989 – சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 6.9 Mw நிலநடுக்கம் தாக்கியதில் 63 பேர் உயிரிழந்தனர்.
1989 – அமைதிப் புரட்சி: கிழக்கு செருமனியின் அரசுத்தலைவர் எரிக் ஒனெக்கரை செருமன் சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்ற கட்சியின் உயர்பீடம் முடிவு செய்தது.
1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.[1]
1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
2001 – இசுரேலின் சுற்றுலாத்துறை அமைச்சர் ர்டெகாவாம் சீவி தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி என்ற பெயரைப் பெற்றது.
2006 – ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
2018 – கனடாவில் பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டது.
2018 – கிரிமியாவில் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் 18-அகவை மாணவன் ஒருவன் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்தனர்.
இன்றைய பிறப்புகள்
1817 – சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர் (இ. 1898)
1820 – ஏதவார்து உரோச்சே, பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1883)
1887 – எவுப்ராசியம்மா எலுவத்திங்கல், இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1952)
1892 – ஆர். கே. சண்முகம் செட்டியார், இந்தியப் பொருளாதார அறிஞர் (இ. 1953)
1906 – கே. பி. ஹரன், இந்திய-ஈழப் பத்திரிகையாளர் (இ. 1981)
1912 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (இ. 1978)
1913 – பூரணி, தமிழக எழுத்தாளர் (இ. 2013)
1915 – ஆர்தர் மில்லர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2005)
1919 – ஈசாக் கலாத்னிகோவ், உக்ரைனிய-உருசிய இயற்பியலாளர்
1931 – எஸ். சி. ஜமீர், இந்திய அரசியல்வாதி, மகாராட்டிரா ஆளுநர்
1940 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (இ. 2015)
1947 – பிருந்தா காரத், இந்தியப் பொதுவுடமை அரசியல்வாதி
1948 – ராபர்ட் ஜோர்டான், அமெரிக்க எழுத்தாளர், சிப்பாய் (இ. 2007)
1952 – ஜானு பருவா, இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
1959 – அமீனா குரிப், மொரிசியசின் குடியரசுத் தலைவர், உயிரியற் பல்வகைமையாளர்
1965 – அரவிந்த டி சில்வா, இலங்கைத் துடுப்பாளர்
1970 – அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாளர்
1972 – எமினெம், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
1983 – பெலிசிட்டி ஜோன்ஸ், ஆங்கிலேய நடிகை
1992 – பிரணிதா சுபாஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1992 – கீர்த்தி சுரேஷ், தெனிந்தியத் திரைப்பட நடிகை
இன்றைய இறப்புகள்
532 – இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
1690 – மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சிய புனிதர், அருட் சகோதரி (பி. 1647)
1849 – பிரடெரிக் சொப்பின், போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810)
1887 – குசுத்தாவ் கிர்க்காஃப், செருமானிய இயற்பியலாளர் (பி. 1824)
1920 – ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887)
1941 – ஜான் சுடேன்லி பிளாசுகெட், கனடிய வானியலாளர் (பி. 1865)
1981 – கண்ணதாசன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1927)
2013 – சரோஜினி வரதப்பன், தமிழக சமூக சேவகி, எழுத்தாளர் (பி. 1921)
2014 – மசாரு இமோடோ, சப்பானிய எழுத்தாளர் (பி. 1943)
இன்றைய சிறப்பு நாள்
இஞ்ஞாசியார் விழா
எண்ணிம சமூக நாள் (இந்தியா)
உலக வறுமை ஒழிப்பு நாள்