திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூரைச்சேர்ந்த அர்ச்சுணன் (67). இவர் ராணிப்பேட்டை சிப்காட் சிட்கோ எஸ்டேட்டில் உள்ள கம்பெனியில் செக் யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு ஒரு மனைவி ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்நிலையில் நேற்று மாலை குப்பத்தாமோட்டூரி லிருந்து சிப்காட்டுக்கு அர்ச்சுணன் சைக்கிளில் வந்தார். பெல் ரோட்டில் வந்த போது எதிரில் வந்த ஸ்கூட்டர் சைக்கிளில் மோதியது.
தலையில் காயமடைந்த அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
விபத்து குறித்து சிப்காட் எஸ்ஐ ஜான்சேவியர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.