வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டி ஸ்ரீ லஷ்மி குபேர யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக மக்கள் அனைவரும் ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்கிய முடன் வாழ பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகள் தலைமையில் இந்த ஸ்ரீ லஷ்மி குபேர யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பலவித வண்ண மலர்களால் விசேஷ அர்ச்சனை, தீபாரதனை செய்யப்பட்டது.
யாகம் மற்றும் அபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரசாதமும், குபேர ரட்சை, டாலர், குங்குமம் வழங்கப்பட்டன.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை அமாவாசையையொட்டி ஸ்ரீசரப சூலினி பிரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற்றது.