குறள் : 916

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

மு.வ உரை :

அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.

கலைஞர் உரை :

புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்

சாலமன் பாப்பையா உரை :

தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.

Kural 916

Thannalam Paarippaar Thoyaar Thakaiserukkip
Punnalam Paarippaar Thol

Explanation :

Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).


Horoscope Today: Astrological prediction for October 28 2022


இன்றைய ராசிப்பலன் - 28.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


28-10-2022, ஐப்பசி 11, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி பகல் 10.34 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் பகல் 10.42 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 10.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 7.47 மணி முதல் 8.23 மணி வரை. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 28.10.2022 | Today rasi palan - 28.10.2022


மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்

இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன உளைச்சல் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் சற்று குறையும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருள் சேரும்.

கும்பம்

இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாககூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.





கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001