ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் மானியம் பெற இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
Farmers in Ranipet district have to register online to get subsidy Collector Information


தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம், தமிழ் நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி அபிவிருத்திதிட்டம் மூலமாக மானியம் பெற இணையவழி பதிவு செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே tnhorticulture.tn.gov.in என்ற இணையவழியில் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் பதிவு செய்யத் தெரியாத அல்லது இயலாத விவசாயிகள் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.