வேலூர் மாவட்டம் அம்முண்டி மந்தைவெளி தெருவை சேர்ந்த செந்தாமரை (50), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை பொன்னையிலிருந்து ராணிப்பேட்டைக்கு பைக்கில் சென்றார்.
பிள்ளையார் குப்பம் கூட்ரோடு அருகே சென்ற போது முன்னால் சென்ற அதேபகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டிச் சென்ற பைக், திடீரென வலதுபுறம் திரும்பியதாக கூறப்படுகிறது. இதில் பின்னால் வந்த செந்தாம ரையின் பைக், முன்னால் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த செந்தாமரை பலத்த காயமடைந்தார்.
அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தாமரை நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பார்த்தசாரதி, எஸ்ஐ ஜான்சேவியர் ஆகியோர் வழக்குப்பதிந்து ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.