ராணிப்பேட்டை தி.ஜி.கே உலக பள்ளிக்கு எஜூகேஷன் வேர்ல்ட் நடத்திய தரவரிசையில் தமிழகத்தில் முதலிடத்தை பிடித்தற்கான சான்றிதழை தலைமை அதிகாரி மிண்டலர், பிரிக்ஷித் தண்டா ஆகியோரிடமிருந்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் வினோத் காந்தி பெற்றுக்கொண்டார்.
ராணிப்பேட்டை நகரில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் தி.ஜி.கே உலகபள்ளி(டே.கம் போர்டிங்) உண்டு உறைவிடப் பள்ளியில் 8வது முறையாக தமிழகத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை சர்வதேச அளவில் பள்ளிகளைத் தரப்பரிசோதனை செய்யும் எஜூகேஷன் வேர்ல்டு அமைப்பு அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை ஜி.கே உலக பள்ளியை உள்கட்டமைப்பு வசதி, கல்வி தரத்திற்காக தமிழக அளவில் முதல் பள்ளியாக தேர்வு செய்து சான்றிதழ். விருது வழங்கி பாராட்டியுள்ளது. விருது வழங்கும் விழா டெல்லி அருகே கூர்க்காவில் நடைபெற்றது.
எஜுகேஷன் வேர்ல்ட் அமைப்பு அதிகாரிகள் மிண்டலர், பிரிக்ஷித் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு ஜி.கே உலக பள்ளியின் நிர்வாக இயக்குனர் வினோத் காந்தியிடம் விருதினை வழங்கினர்.
பள்ளியின் நிர்வாக இயக்குனர் வினோத் காந்தி கூறியதாவது:
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு விளையாட்டு துறைகளிலும் சாதனை படைத்து வரும் நமது ஜி.கே உலக பள்ளி தமிழகத்திலேயே உண்டு உறைவிடப் பள்ளியில் நம்பர் ஒன் இடத்தை பெற்று 8வது முறையாக சாதனை படைத்துள்ளது.
சென்ற ஆண்டு தேசிய அளவில் 16வது இடத்தில் இருந்த ஜி.கே உலக பள்ளி இந்த ஆண்டு 10வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளது.
பள்ளி தொடர்ந்து ரேங்கிங் அதாவது தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து தக்கவைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறந்த சர்வதேச தரத்துடன் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியை வழங்கி எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களாக சாதனை படைக்கும் அளவிற்கு மாணவ மாணவிகளை உருவாக்கி வருகிறோம்.
விளையாட்டுத்துறையில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வகையில் தடகளமைதானம், நீச்சல் குளம்,ஸ்கேட்டிங் என பல்வேறு குழு விளையாட்டு போட்டிகளுக்கு தனித்தனியாக மைதானங்கள் ஜி.கே உலகப் பள்ளியில் உள்ளது.