Police searching for husband's brother who slashed pregnant woman with knife near Panavaram

பாணாவரம் அடுத்தமேல் வீராணம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (33), இவரது மனைவி ராஜகுமாரி(27). ரமேஷின் அண்ணன் சேகர்(37), இவரது மனைவி கோமதி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரமேஷின் மனைவி ராஜகுமாரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவரது ஒன்றரை வயது குழந்தை அடிக்கடி வெளியே விளையாட ஓடிவிடுவதால் வீட்டின் கதவை சாத்தி வைப்பது வழக்கமாம்.

ஆனால், சேகரும், அவரது மனைவி கோமதியும் கதவை திறந்துவிட்டு விடுவார்களாம்.

குழந்தை அடிக்கடி வெளியே விளையாட செல்வதால் கர்ப்பிணியான தனக்கு எழுந்து செல்ல சிரமமாக இருப்பதால் கதவை சாத்தி உள்ளேன். நீங்கள் அடிக்கடி திறந்து விடுவது ஏன் என கணவரின் அண்ணனிடம் நேற்று முன்தினம் ராஜகுமாரி தட்டிக் கேட்டுள்ளார். இதில், இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.

இதில், ஆத்திரம் அடைந்த சேகர் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து கர்ப்பிணியான ராஜகுமாரியின் கழுத்தில் வட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம டைந்து அலறி துடித்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, ரமேஷ் நேற்று பாணாவரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ் பெக்டர் பார்த்திபன் தலைமறைவான சேகரை தேடி வருகிறார்.