குறள் : 920

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

மு.வ உரை :

இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும் கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

கலைஞர் உரை :

இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்

சாலமன் பாப்பையா உரை :

உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.

Kural 920

Irumanap Pentirum Kallum Kavarum
Thiruneekkap Pattaar Thotarpu

Explanation :

Treacherous women liquor and gambling are the associates of such as have forsaken by Fortune.

Horoscope Today: Astrological prediction for November 01 2022


இன்றைய ராசிப்பலன் - 01.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


01-11-2022, ஐப்பசி 15, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரவு 11.05 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 02.53 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 01.11.2022 | Today rasi palan - 01.11.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். 

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வருமானம் பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

தனுசு

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

மீனம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001