ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

Collector requests to be careful when bursting firecrackers during Diwali festival


தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலியெழுப்பும், சுற்றுச்சூழல் மாசு இல்லாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படியும் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணிவரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ரகங்களை மட்டுமே வெடிக்க வேண்டும். வெங்காய வெடி, பட்டாணி வெடி, அவுட், சரவெடி போன்றவற்றை வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும் போது சுற்றிலும் எரியக்கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பஸ், ரயில் பயணங்களின் போது பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. பெரியோர் முன்னிலையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது அருகில் வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்க வேண்டும்.

பட்டாசுகள் வெடிக்கும் போது இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது மிகவும் சிறப்பு. கம்பி மத்தாப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் நிரப்பிய வாளியில் போட வேண்டும். பக்கவாட்டில் தள்ளி நின்று பட்டாசுகளை பற்ற வைக்க வேண்டும்.

பட்டாசுகள் வெடிக்கும்போது சானிடைசர் பயன்படுத்த கூடாது. மருத்துவமனை, பள்ளிக்கூடம் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. பட்டாசுகளை மிகவும் கவனமுடன் வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடித்த பிறகு கை, கால் களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.