Ducati Multistrada V4 Pikes Peak launched at Rs 31.48 lakh
தனது புத்தம் புதிய மல்டிஸ்ட்ராடா வி4 பைக்ஸ் பீக் மோட்டார் சைக்கிளை டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளது. ரூ.31.48 லட்சம் (காட்சியக விலை) விலையிடப்பட்டுள்ள இந்த பைக்குகளுக்கான முன்பதிவு நாடு முழுவதும் அடுத்த மாதம் துவங்கும்.
170 ஹெச்பி சக்தி கொண்ட 1,158 சிசி என்ஜின் பொருத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளில், கார்னரிங் ஏபி எஸ், டிராக்ஷன், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.