US company offers 10% pay hike during notice period, founder says 'no hard feelings



அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கொரில்லா நிறுவனம் ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சி, நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு அவர்கள் வெளியேறும் போது கூட கடுமையான உணர்வுகள் ஏற்படாமல் இருக்க ஒரு தனித்துவமான கொள்கை உருவாக்கியுள்ளது.

அதன்படி இந்நிறுவனமானது வெளிச்செல்லும் ஊழியர்களை நன்றாக உணரவும், நேர்மறையான எண்ணத்துடன் அவர்கள் வெளியேறும் அதன் ஊழியர்களுக்கு 10 சதவீத உயர்வுடன் செட்டில்மெண்ட் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்தத் திட்டத்தை ஒரு வெளிச்செல்லும் ஊழியர், ஒரு புதிய ஊழியர் மற்றும் நிறுவனத்திற்கு இடையே ஒரு 'சுமுகமான உறவை ஏற்படுத்தவே என அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜான் ஃபிராங்கோ கூறியுள்ளார்

இந்நிறுவனம் இத்திட்டத்தைக் கொண்டுவர முக்கிய காரணமே ஊழியர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் காலத்தில் புதிதாக வரும் ஊழியர்களுடன் நல்ல உறவைப் பலப்படுத்தவும், அவர்கள் அடுத்தவேலைக்குச் சேரும் வரை அவர்களின் நிதி நிலைமையை சுமுகமாகக் கொண்டு செல்லவும் உதவும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் ஜான் அவரின் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை விரும்புவதில்லை எனவும், அப்படி வெளியேற விரும்பினால் அவர்களுக்கு ஊக்கமளிக்க இப்படி ஒரு ஐடியாவை கொண்டு வந்ததாக கூறிகிறார்.