👉 1609ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்.

✈ 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

✏ 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஹாங்காங்கில், ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது.

💣 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முறையாக லியோ சிலார்ட் அறிவித்தார்.


முக்கிய தினம் :-


தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம்

🌐 நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு-தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்பநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. டிசம்பர் 19 அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா.வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு 2012இல் மாற்றப்பட்டது.


பிறந்த நாள் :-


சி.வை.தாமோதரம்பிள்ளை

✍ தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை 1832ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி இலங்கையில் பிறந்தார்.

🏆 பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர்.

🏆 1895ஆம் ஆண்டு இவருக்கு அரசு ராவ் பகதூர் என்ற பட்டத்தை வழங்கியது. 1901ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.


ஐரீன் ஜோலியட் கியூரி

🏆 செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளரான ஐரீன் ஜோலியட் கியூரி 1897ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பாரிஸில் பிறந்தார்.

🏆 இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர்.

🏆 இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிடைத்தது.

🏆 ஐரீன் ஜோலியட் கியூரி 1956ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பாரிஸில் மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


கிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.

1185 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார்.

1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.

1634 – மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், பல கட்டடங்கள் சேதமடைந்தன.

1683 – உதுமானியப் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.

1762 – சூலு சுல்தானகம் மலேசியாவில் உள்ள பலம்பாங்கன் தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் கையளித்தது.

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன.

1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.

1857 – மத்திய அமெரிக்கா கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.

1890 – ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.

1915 – பிரெஞ்சுப் போர்வீரர்கள் ஆர்மீனிய இனப்படுகொலைகளில் இருந்து தப்பிய 4,000 இற்கும் அதிகமானோரைக் காப்பாற்றினர்.

1923 – தெற்கு ரொடீசியா (இன்றைய சிம்பாப்வே) ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

1933 – அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.

1940 – குகை ஓவியங்கள் பிரான்சில் லாசுக்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.

1940 – நியூ செர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் செருமனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி வீட்டுக்காவலிலிருந்து செருமனிய படைத்தளபதி ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.

1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.

1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1974 – எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1977 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.

1980 – துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1990 – செருமானிய மீளிணைவுக்கான ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது.

1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2001 – ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான "ஆன்செட் ஆஸ்திரேலியா" மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.

2003 – லிபியா மீதான பன்னாட்டுப் பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விலக்கியது.

2006 – திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது "தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்" என்று தெரிவித்தார். இதற்கு முசுலிம்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.

2008 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.

2015 – மத்தியப் பிரதேசம், பெட்லாவாத் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1832 – சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (இ. 1901)

1866 – வெல்லிங்டன் பிரபு, ஆங்கிலேயத் துடுப்பாளர், அரசியல்வாதி, கனடாவின் 13வது ஆளுநர் (இ. 1941)

1897 – ஐரீன் ஜோலியோ கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1956)

1912 – பெரோஸ் காந்தி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர் (இ. 1960)

1913 – ஜெசி ஓவென்ஸ், அமெரிக்கத் தடகள விளையாட்டு வீரர் (இ. 1980)

1913 – இஜி டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (இ. 2013)

1915 – பி. எஸ். கைலாசம், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி

1930 – அக்கிரா சுசுக்கி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளர்

1938 – திலகன், மலையாள நடிகர் (இ. 2012)

1944 – லியோனார்ட் பெல்டியர், அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர்

1945 – ரிச்சர்ட் தாலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1957 – ஹான்ஸ் சிம்மர், செருமானிய இசையமைப்பாளர்

1960 – வடிவேலு, இந்திய தமிழ் நகைச்சுவை நடிகர்

1965 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)

1968 – அமலா, இந்திய நடிகை

1969 – கப்டன் மொறிஸ், விடுதலைப் புலிகளின் போராளி (இ. 1989)

1973 – பால் வாக்கர், அமெரிக்க நடிகர் (இ. 2013)

1977 – கிரிஷ், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1989 – கௌதம் கார்த்திக், தமிழகத் திரைப்பட நடிகர்

இன்றைய இறப்புகள்


1885 – ரண்பீர் சிங், சம்மு காசுமீர் மன்னர் (பி. 1830)

1927 – சாரா பிரான்சிசு வைட்டிங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1847)

1977 – ஸ்டீவ் பைக்கோ, தென்னாபிரிக்க செயற்பாட்டாளர் (பி. 1946)

1981 – எயுஜேனியோ மொண்டாலே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1896)

1983 – ரஞ்சன், இந்திய நடிகர், நாட்டிய, இசைக் கலைஞர், எழுத்தாளர் (பி. 1918)

1997 – இளங்கீரன், ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர் (பி. 1927)

2004 – பி. டி. சாமி, தமிழக எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் (பி. 1930)

2009 – நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1914)

2010 – சுவர்ணலதா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

2017 – ஆர். கே. சண்முகம், தமிழக எழுத்தாளர் (பி. 1930)

இன்றைய சிறப்பு நாள்


தேசிய நாள் (கேப் வர்டி)