🏫 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.


📺 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி கண்டங்களுக்கு இடையேயான முதலாவது நேரடி தொலைக்காட்சி ஜப்பானில் இருந்து கலிபோர்னியாவிற்கு ஒளிபரப்பப்பட்டது.

💽 1956ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி வன்தட்டு நினைவகத்தை (computer disk memory) கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.

🌇 1781ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி ஸ்பானிய கவர்னரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைக்கப்பட்டது.

பிறந்த நாள் :-


தாதாபாய் நவ்ரோஜி

🏁 சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🏁 இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான்.

🏁 1852-ல் அரசியல் பயணத்தை தொடங்கினார். இவர் ஆங்கிலேயர் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.

🏁 இவர் இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

🏁 இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக்காட்டினார்.

🏁 பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.

🏁 சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நவ்ரோஜி தனது 92-வது வயதில் (1917) மறைந்தார்.



இன்றைய நிகழ்வுகள்


476 – கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தார். ஓடாசெர் இத்தாலியின் மன்னராகத் தன்னை அறிவித்தார். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது.

626 – சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார்.

929 – சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர்.

1282 – அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார்.

1666 – இலண்டனின் பெரும் தீ: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.

1774 – ஜேம்ஸ் குக்கின் இரண்டாவது பயணத்தில் நியூ கலிடோனியா முதல்தடவையாக ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் 44 எசுப்பானியக் குடியேறிகளால் அமைக்கப்பட்டது.

1800 – மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது.

1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டை முற்றுகையின் போது கோட்டை தீக்கிரையாக்கப்பட்டது.

1870 – பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். பிரெஞ்சு மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.

1884 – குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்கையை பிரித்தானியா கைவிட்டது.

1886 – 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவர் யெரொனீமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தார்.

1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன் தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஈஸ்ட்மேன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.

1912 – உதுமானியப் பேரரசு அல்பேனியக் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியதை அடுத்து கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

1919 – துருக்கிக் குடியரசை அமைத்த முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியா, திரேசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மாநாடு கூட்டினார்.

1923 – அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வான்கப்பல் செனான்டோ சேவைக்கு விடப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய வான்படையின் முதல் தாக்குதல் இடம்பெற்றது.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் கிரீர் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை விடுவித்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.

1948 – நெதர்லாந்தின் அரசி விலெல்மினா சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து விலகினார்.

1951 – கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி யப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.

1963 – சுவிட்சர்லாந்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் உயிரிழந்தனர்.

1970 – சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவரானார்.

1971 – அலாஸ்காவில் போயிங் விமானம் ஜூனோ அருகில் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் உயிரிழந்தனர்.

1972 – மார்க் ஸ்பிட்சு ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார்.

1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1975 – அரபு-இசுரேல் முரண்பாடு குறித்த சினாய் இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டது.

1985 – கரிமத்தின் முதலாவது புலரின் மூலக்கூறு பக்மின்ஸ்டர்ஃபுலரின் கண்டுபிடிக்கப்பட்டது.

1989 – கிழக்கு செருமனியின் லைப்சிக் நகரில் மக்களாட்சி சீர்திருத்தத்திற்கு ஆதரவான முதலாவது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1996 – போதைப்பொருளுக்கு எதிரான போர்: கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை கொலம்பிய இராணுவத் தளம் மீது தாக்குதலை நடத்தியது. மூன்று வார கரந்தடிப் போரில் குறைந்தது 130 கொலம்பியர்கல் கொல்லப்பட்டனர்.

1998 – இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

2006 – இசுரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

2007 – சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

2010 – நியூசிலாந்தின் தெற்குத் தீவில் இடம்பெற்ற 7.1 அளவு நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

பிறப்புகள்தொகு

973 – அல்-பிருனி, பாரசீக மருத்துவர், பல்துறையறிஞர் (இ. 1048)

1824 – ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1896)

1825 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல்வாதி (இ. 1917)

1880 – பூபேந்திரநாத் தத்தர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1961)

1888 – ஒஸ்கார் சலெமர், செருமானிய ஓவியர், சிற்பி, வடிவமைப்பாளர் (இ. 1943)

1902 – தி. சதாசிவம், தமிழக இதழாசிரியர், பாடகர் (இ. 1997]])

1926 – ஐவன் ஈலிச், ஆத்திரிய போதகர், மெய்யியலாளர் (இ. 2002)

1927 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினி அறிவியலாளர் (இ. 2011)

1941 – சுசில்குமார் சிண்டே, ஆந்திராவின் 19வது ஆளுநர்

1952 – ரிஷி கபூர், இந்திய நடிகர்

1957 – பைசல் காசிம், இலங்கை அரசியல்வாதி

1958 – ஜேக்குவிலைன் எவிட், அமெரிக்க வானியலாளர்

1962 – சின்யா யாமானாக்கா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்

1962 – கிரான் மோரி, இந்தியத் துடுப்பாளர்

1972 – டேனியல் நெஸ்டர், செர்பிய-கனடிய டென்னிசு வீரர்

1981 – பியான்சே நோல்ஸ், அமெரிக்க நடிகை, பாடகி

இறப்புகள்தொகு

422 – முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

1323 – ஜெஜீன் கான், சீனப் பேரரசர் (பி. 1303)

1809 – யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (பி. 1754)

1907 – எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசையமைப்பாளர் (பி. 1843)

1942 – கே. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1876)

1965 – ஆல்பர்ட் சுவைட்சர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மதப்பரப்புனர், மருத்துவர் (பி. 1875)

1977 – இ. எஃபு. ஷூமாசர், செருமானிய-ஆங்கிலேயப் பொருளியலாளர் (பி. 1911)

1990 – லாரன்ஸ் ஏ க்ரீம், அமெரிக்க வரலாற்றாளர் (பி. 1925)

2006 – இசுடீவ் இர்வின், ஆத்திரேலிய இயற்கை ஆர்வலர் (பி. 1962)

2007 – குமாரி ருக்மணி, தமிழகத் திரைப்பட நடிகை (பி. 1929)

சிறப்பு நாள்தொகு

குடியேறிகள் நாள் (அர்கெந்தீனா)

வெளி இணைப்புகள்தொகு

"இன்றைய நாளில்". பிபிசி.

"செப்டம்பர் 4 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.

நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்