ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய 1-வது பிளாட் பாரத்தில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும் படியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். 

அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (30) என்பது தெரியவந்தது. 

இவர், ரயிலில் சென்ற பயணி ஒருவரின் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.