Special Homam for Prime Minister Modi at Walaja Sri Dhanvantari Peedam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், திருஷ்டி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம் போன்ற பல்வேறு வகையான ஹோமங்கள் நடந்தன.

பிரதமர் பிறந்த நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரம், விருச்சிகலக்னம் என்ற பெயரில் மகா சங் கல்பம் செய்யப்பட்டு அதற் குரிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 

கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது. தன்வந்திரி பீடாதிபதி முரளிதரஸ்வாமிகளின் வாழ்த்து கடிதத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.