வாலாஜாபேட்டை அடுத்த அம்மூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (50). இவர் போர்வெல் கம்பெனியின் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை 3:30 மணி அளவில் டோல்கேட் அருகே வாலாஜா நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அவருக்கு முன்னால் சென்ற லாரி இடது பக்கமாக பார்க்கிங் பகுதிக்கு திரும்பியபோது எதிர்பாராமல் பைக்கில் மோதியது.
பலத்த காயமடைந்த ராமநாதன் வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்தி ரியில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.