திருமணமான 25 நாட்களில் பரிதாபம் 

Newly Married girl commits suicide near Walaja


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். சிப்காட் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சவுமியா (வயது 20). இவர்களுக்கு திருமணம் ஆகி 25 நாட்களே ஆகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சவுமியா திடீரென படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.