5 pounds worth of jewelery and cash were stolen by breaking into a house near sipcot
நேற்று ராஜாமணி வழக்கம்போல் மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு லோடுக்கு சென்றுவிட்டார். மற்றவர்களும் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். ராஜாமணியின் சகோதரி மகன் சரத்குமார் (26) என்பவர் மட்டும் வீட்டில் இருந்தாராம். அவரும் நேற்று பகல் 11.30 மணியளவில் வீட்டை பூட்டிக் கொண்டு புளியந்தாங்கல் தொழிற்சாலை பகுதிக்கு - சென்றார்.
பிற்பகல் 2 மணியளவில் வீடு திரும்பிய சரத்குமார், வீட்டின் முன்பக்க கதவில் பூட்டியிருந்த பூட்டை காணாது அதிர்சசியடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 5 பவுன்நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் - ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் சப்இன்ஸ் பெக்டர் தாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.