குறள் : 887

செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

மு.வ உரை :

செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும் உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

கலைஞர் உரை :

செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்

சாலமன் பாப்பையா உரை :

செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.

Kural 887

Seppin Punarchchipol Kootinum Kootaadhe
Utpakai Utra Kuti

Explanation :

Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

Horoscope Today: Astrological prediction for September 29 2022



இன்றைய ராசிப்பலன் - 29.09.2022 | Indraya Raasi Palan 



இன்றைய பஞ்சாங்கம் | Indraya Nalla Neram| Indraya Panchangam 

29-09-2022, புரட்டாசி 12, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 12.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 05.13 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 29.09.2022 | Today rasi palan - 29.09.2022

மேஷம்

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் சுபசெலவுகள் செய்ய நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சேமிக்கும் அளவிற்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

கடகம்

இன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பணவரவுகள் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மகரம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001