குறள் : 877

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து


மு.வ உரை :

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.


கலைஞர் உரை :

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது


சாலமன் பாப்பையா உரை :

நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.


Kural 877

Novarka Nondhadhu Ariyaarkku Mevarka

Menmai Pakaivar Akaththu


Explanation :

Relate not your sufering even to friends who are ignorant of it nor refer to your weakness in the presence of your foes.

Horoscope Today: Astrological prediction for September 19 2022



இன்றைய ராசிப்பலன் - 19.09.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panhangam | Indraya Nalla Neram 

19-09-2022, புரட்டாசி 02, திங்கட்கிழமை, நவமி திதி இரவு 07.02 வரை பின்பு தேய்பிறை தசமி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 06.10 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் மாலை 06.10 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.


இன்றைய ராசிப்பலன் - 19.09.2022 | Today rasi palan - 19.09.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று உங்களின் உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். வீண் செலவுகளை தவிர்த்தால் பணப்பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

கன்னி

இன்று உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியான புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

மீனம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ வழிபாடு நல்லது.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001