குறள் : 871
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
மு.வ உரை :
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
கலைஞர் உரை :
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது
சாலமன் பாப்பையா உரை :
பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.
Kural 871
Pakaiennum Panpi Ladhanai Oruvan
Nakaiyeyum Ventarpaatru Andru
Explanation :
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.
Horoscope Today: Astrological prediction for September 13 2022
இன்றைய ராசிப்பலன் - 13.09.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-09-2022, ஆவணி 28, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 10.38 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் காலை 06.36 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 13.09.2022 | Today rasi palan - 13.09.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வராத கடன்கள் இன்று வசூலாகும்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பாராத திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் பெருகும். செலவுகள் குறைந்து காணப்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது, சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
துலாம்
இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினை தீரும்.
தனுசு
இன்று வரவேண்டிய பணவரவில் இழுபறி நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நன்றாக யோசித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் இழுபறி நிலை நிடிக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கும்பம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் நல்ல நட்புறவு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற யோசித்து செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றி தரும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001