குறள் : 870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

மு.வ உரை :

கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

கலைஞர் உரை :

போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்

சாலமன் பாப்பையா உரை :

நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது? புகழ் சேராது.

Kural 870

Kallaan Vekulum Siruporul Egngnaandrum
Ollaanai Ollaa Tholi

Explanation :

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).


Horoscope Today: Astrological prediction for September 12 2022


இன்றைய ராசிப்பலன் - 12.09.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


12-09-2022, ஆவணி 27, திங்கட்கிழமை, துதியை திதி பகல் 11.36 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 06.59 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Nalla Neram 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 12.09.2022 | Today rasi palan - 12.09.2022


மேஷம்

இன்று தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணிச்சுமையால் டென்ஷன், உடல் சோர்வு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்

இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக உங்கள் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்கள் மூலம் இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

துலாம்

இன்று குடும்ப உறவுகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். உங்களது பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். 

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியாக பொருளாதார உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் கிடைக்கும் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.




கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001