குறள் : 866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
மு.வ உரை :
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய் மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
கலைஞர் உரை :
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்
சாலமன் பாப்பையா உரை :
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்
Kural 866
Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan
Penaamai Penap Patum
Explanation :
Highly to be desired is the hatred of him whose anger is blind and whose lust increases beyond measure.
Horoscope Today: Astrological prediction for September 08 2022
இன்றைய ராசிப்பலன் - 08.09.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
08-09-2022, ஆவணி 23, வியாழக்கிழமை, திரியோதசி திதி இரவு 09.03 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவோணம் நட்சத்திரம் பகல் 01.45 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். ஓணம் பண்டிகை. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 08.09.2022 | Today rasi palan - 08.09.2022
மேஷம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் வெளி வட்டார நட்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்
இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்தழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
தனுசு
இன்று வியாபாரத்தில் வேலையாட்களால் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். வண்டி, வாகன பராமரிப்பிற்காக செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கடன் பிரச்சினை குறையும்.
மகரம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.
கும்பம்
இன்று பிள்ளைகளின் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை குறையும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001